Home உலகம் ஆசிய வட்டாரப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க ஜப்பான் திட்டம்

ஆசிய வட்டாரப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க ஜப்பான் திட்டம்

626
0
SHARE
Ad

shinzo abeசிங்கப்பூர், மே 31 – ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளில் நிலவி வரும் எல்லைப் பிரச்சனைகளில் அமைதியை நிலைநாட்ட, ஜப்பான் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் சின்சோ அபே கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிங்கப்பூரில் நடந்த ஆசிய வட்டாரப் பாதுகாப்பு மாநாட்டில் அவர் கூறியதாவது:-

“ஆசிய நாடுகள் சிலவற்றில் நிலவி வரும் எல்லைப் பிரச்சனைகளில் அமைதியை நிலை நாட்ட, ஜப்பான எப்பொழுதும் தயாராக உள்ளது. தற்போதைய செயல்பாடுகளை விட இன்னும் அதிகமான பங்கினை வகிக்கவே நாங்கள் விரும்புகின்றோம்.”

#TamilSchoolmychoice

“மேலும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் தங்கள் பகுதிகளைப் பாதுகாக்க கூட்டு பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். அதற்கு ஜப்பான் எப்பொழுது தடையற்ற ஆதரவினை வழங்க தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

கிழக்கு சீனக் கடல் எல்லைப் பகுதிகளில் சீனா தொடந்து நடத்தி வரும் அத்துமீறல்கள் ஜப்பானுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிரதமர் அபே தங்கள் நாட்டு இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறார் என்றும், மேலும் தங்களுக்கு ஆதரவாக இருக்க தென் கிழக்கு ஆசிய நாடுகளின் நட்புறவை மேம்படுத்தி வருவகிறார் என்றும் கூறப்படுகின்றது.