Home உலகம் ஜப்பான் : யோஷிஹிடே சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி

ஜப்பான் : யோஷிஹிடே சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி

1361
0
SHARE
Ad
படம்: யோஷிஹிடே சுகா

தோக்கியோ:ஜப்பானின் பிரதமர் பதவியிலிருந்து விலகவிருக்கும் யோஷிஹிடே சுகாவுக்குப் பதிலாக அந்தப் பதவியைக் குறிவைத்து நால்வர் போட்டியில் குதித்திருக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) ஆளும் எல்டிபி கட்சியைச் சேர்ந்த அந்த நால்வரும் தங்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி பிரதமர் பதவிக்கான வாக்களிப்பு நடைபெறும்.

#TamilSchoolmychoice

58 வயதான தாரோ கோனோ, முன்னாள் வெளியுறவு அமைச்சரான 64 வயது புமியோ கிஷிடா, 60 வயது முன்னாள் பெண் வெளியுறவு அமைச்சர் திமுசானே தாக்காய்சி, 61 வயது பெண்மணியான செய்கோ நோடா ஆகியோரே அந்த நால்வராவர்.

போட்டியிடும் நால்வரில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகும் யோஷிஹிடே சுகா

யோஷிஹிடே சுகா கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு தொழிற்சாலை ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கிய சுகா ஒரு விவசாயியின் மகனாவார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார வல்லரசான ஜப்பானின் பிரதமராக 71-வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டார் சுகா.

ஜப்பானின் ஆளும் கட்சி எல்டிபி (லிபரல் டெமோக்ரெடிக் பார்ட்டி) சார்பில் அப்போது பதவி வகித்த சின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து சுகா அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டுக்குள் அவர் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்தே புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal