Home நாடு தெலுக் இந்தானில் இன்று இடைத்தேர்தல் – வெற்றியடையப் போவது யார்?

தெலுக் இந்தானில் இன்று இடைத்தேர்தல் – வெற்றியடையப் போவது யார்?

753
0
SHARE
Ad

teluk intan nomination

தெலுக் இந்தான், மே 31 – தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகின்றது.

இடைத்தேர்தலின் முடிவுகள் இன்றிரவு 9 மணியளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.வாக்குச் சாவடிகள் மாலை 5 மணிக்கு மூடப்பட்ட பின் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் என்று பேராக் மாநில தேர்தல் ஆணையக்குழுத் தலைவர் அகமட் அட்லி அப்துல்லா  கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ மா சியூ கியோங்க மற்றும் ஜசெக வேட்பாளராக டையானா சோஃப்யா முகமட் டவுட் ஆகிய இருவரும் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

பதிவு செய்யப்பட்ட 60,349 வாக்காளர்களில் 59,927 வாக்காளர்களே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் 80 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சீ லியோங் பெங் (வயது 48) புற்றுநோயால் கடந்த மே 1-ல் காலமானதால், அவரது தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.