Home இந்தியா சுய நோக்கத்திற்காக என்னை சந்தித்து சென்றிருக்கிறார் பிரியங்கா காந்தி- நளினி

சுய நோக்கத்திற்காக என்னை சந்தித்து சென்றிருக்கிறார் பிரியங்கா காந்தி- நளினி

700
0
SHARE
Ad

piriyanசென்னை, மே 31 – ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாழன், சாந்தன், முருகன் மற்றும் நளினி கடந்த 7 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரியங்கா காந்தி தன்னை சிறையில் வந்து சந்தித்தது ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க நினைக்கிறேன் எனவும் சுய நோக்கத்திற்காக என்னை சந்தித்து சென்றிருக்கிறார் என்றும் நளினி கூறியுள்ளார்.

அந்த சந்திப்பையொட்டி உருவாக்கப்பட்ட செய்திகளும் கருத்துகளும் எங்களுக்குள் மோசமான விளைவுகளை உருவாக்கிவிட்டன. அதனால் வேதனைகளை,வலிகளை நான் மட்டுமே அறிவேன் என்றார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனை கைதியான நளினி விடுதலை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பிறகு உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியதால் இன்னும் சிறையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

சிறையில் இருக்கும் போது ஒரு நாள் என்னை சிறைக் கண்காணிப்பாளர் என்னை அழைப்பாதச் சொல்லி என்னை அழைத்துச் சென்றார்கள். அந்த அறைக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு ஒரு பெண் இருந்தார். அவர் யார் என்று எனக்குத் தெரியாது. வந்திருந்தவர் தான் பிரியங்கா காந்தி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் உங்கள் தந்தை கொலையில் நான் மட்டும் அல்ல. முருகன், சாந்தன், பேரறிவாழன் ஆகிய நால்வரும் நிரபராதிகள் என்றேன். அதை அவர் நம்பினாரா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது.

ஆனால், சந்திப்பின் போது அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார். தன் தந்தையை இழந்த இளம் பெண்ணின் வேதனையாகவோ மன எழுச்சியாகவோ அது இருக்கலாம். அதை அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான பலியை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். அவரவர் சுய நோக்கத்திற்காக என்னை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று நளினி ஆதங்கத்துடன் கூறினார்.

இதற்கிடையே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு நல்ல அறிவிப்பு வருமா என்று ஆவலுடன் காத்திருப்பதாக நளினி தெரிவித்தார்.