Home உலகம் நைஜீரிய கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி!

நைஜீரிய கால்பந்து மைதானத்தில் குண்டு வெடிப்பு – 40 பேர் பலி!

559
0
SHARE
Ad

footநைஜர், ஜூன் 2 – நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள முபி நகரில் இருக்கும் கால்பந்து மைதானத்தில் நேற்று நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில் , திடீரென்று அந்த மைதானத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த கொடூர தாக்குதலில் குண்டு வெடிப்பில் உடல் கருகியும், கூட்ட நெரிசலில் மிதிபட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக அங்கிருந்து வரும் முதல்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.