கடந்த மே 23 – 24ஆம் தேதி வெளிவந்த நக்கீரன் இதழில், தமிழக முதல்வரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியானதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால், இணை செய்தி ஆசிரியர் ஏ.காமராஜ், தலைமை நிருபர் இளையசெல்வன் ஆகியோர் மீது அவதூறு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா சார்பில், மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது என பத்திரிகை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
Comments