Home நாடு ‘கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு’ மிகச் சிறப்பாக நடைபெற்றது!

‘கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு’ மிகச் சிறப்பாக நடைபெற்றது!

836
0
SHARE
Ad

IMAG0152

கோலாலம்பூர், ஜூன் 3 – மலேசிய உத்தமம் நிறுவனமும், தியான் டிஜிட்டல் திட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு கடந்த மே 31 -ம் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி தொடங்கி மாலை 3.30 மணி வரை, கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

#TamilSchoolmychoice

தமிழ் கட்டற்ற மென்பொருள் முன்னோடிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த சீனிவாஸ், இரவிசங்கர் மற்றும் ஜப்பானில் இருந்து அருண்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். 

மலேசிய உத்தமம் தலைவரான சி.ம.இளந்தமிழ் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் தமிழ் விக்கீப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றியும், அதில் கட்டுரைகள் படைக்கும் உலக நாடுகளைச் சேர்ந்த பல தமிழ் ஆர்வலர்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், கட்டற்ற மென்பொருள் குறித்தும், அதை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

IMAG0153

(மலேசிய உத்தமம் தலைவர் சி.ம.இளந்தமிழ்)

IMAG0145

(திரு.இரவிசங்கர், தமிழ்நாடு)

IMAG0159

( திரு. சீனிவாஸ், தமிழ்நாடு)

IMAG0161

(திரு.அருண்குமார் – ஜப்பான்)

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்