Home நாடு தியோமான் தீவு: காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையை தேடும் பணி தீவிரம்!

தியோமான் தீவு: காணாமல் போன பிரிட்டிஷ் பிரஜையை தேடும் பணி தீவிரம்!

815
0
SHARE
Ad

Huntlyபுலாவ் தியோமான், ஜூன் 3 – கடந்த மே 27ஆம் தேதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கேரத் ஹண்ட்லி என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த தன்னார்வ தொண்டூழியரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடல் ஆமைகள் மீதான ஆய்வுத் திட்டத்தின் கீழ் தியோமானில் தங்கியிருந்த கேரத் பலமாக காயம் அடைந்திருக்கலாம் என தாங்கள் நம்புவதாக அவரை தேடும் குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தியோமானில் உள்ள லுபோக் தேசா நீர்வீழ்ச்சிக்கு செல்வதாக கேரத் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்.

அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அவர் வழி தெரியாமல் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அவர் காணாமல் போயிருப்பதாக கூறப்படும் பகுதி மிகவும் அடர்ந்த நிலையில் உள்ள காட்டுப் பகுதியாகும். அதனால் அவரை தேடும் பணியில் தேடுதல் குழுவுக்குச் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், 34 வயதான கேரத்தின் தாயார் ஜெனட் சௌத் வெல் தனது மகனின் நிலையை நேரில் கண்டறிய புலாவ் தியோமான் வந்துள்ளார். தனது மகன் குறித்த தேடுதல் பணிகள் தனக்கு மன நிறைவளிப்பதாகவும் தனது மகன் இந்தப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவார் என்றும் ஜெனட் கூறினார்.

இதற்கு முன்னதாக தேடுதல் பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெறுவதாக ஹண்ட்லியின் குடும்பத்தார் குறை கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹண்ட்லியின் தாயார் ஜெனட்டுக்கு தங்களின் தேடுதல் பணிகள் குறித்த நிலவரங்களை ரொம்பின் காவல் நிலையத்தின் தலைமை காவல் கண்காணிப்பாளர் ஜொகாரி யாஹ்யா விளக்கமளித்தார்.