Home தொழில் நுட்பம் டிசென் இயங்குதளத்தில் முதல் திறன்பேசி – சாம்சுங்

டிசென் இயங்குதளத்தில் முதல் திறன்பேசி – சாம்சுங்

710
0
SHARE
Ad

Samsungஜூன் 3 – உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான தென் கொரியாவின் சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது அண்ட்ராய்ட் இயங்குதளத்தில் கைத்தொலைபேசிகளை தயாரித்து வருகின்றது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிசென் (Tizen) எனப்படும் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் சாம்சுங் இசட் (Z) என்ற தொலைபேசியை முதலில் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.  பின்னர் இந்தக் கைத்தொலைபேசி மற்ற நாடுகளின் சந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

இந்த டிசென் இயங்குதளம்‘ஓப்பன் சோர்ஸ்’ என அனைவராலும் பகிர்ந்துகொள்ளக் கூடிய இயங்குதளமாகும். சாம்சுங் இசட் புதிய கைத்தொலைபேசிகள் 4.8 அங்குல முகப்புத் திறையைக் கொண்டிருக்கும்.

#TamilSchoolmychoice

இன்று சான்பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கும் டிசென் மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் இந்த கைத்தொலைபேசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டிசென் என்ற இந்த இயங்குதளம் இன்டெல் கார்ப்பரேஷன் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் இணைந்து அண்ராய்டு இயங்குதளத்திற்கு மாற்றாக உருவாக்கியுள்ள தொழில் நுட்பமாகும்.

தற்போது அண்ராய்டு தொழில்நுட்பம் தான் உலக அளவில் மிகப் பிரபலமான இயங்குதளமாக இயங்கி வருகிறது. இதற்கிடையில், டிசென் தொழில்நுட்பத்தில் இயங்கும் இரண்டு கைக் கடிகாரங்களையும் கடந்த பிப்ரவரி மாதத்தில் சாம்சுங் வெளியிட்டது.

மற்ற நிறுவனங்களுடன் கடுமையான வர்த்தகப் போட்டியை எதிர் நோக்கியிருக்கும் தனது திறன்பேசிகள் பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகின்றது.

உதாரணமாக, அண்மையில் அது அறிமுகப்படுத்திய கேலக்ஸி எஸ்5 கைத்தொலைபேசியில் 600 அமெரிக்க டாலர் மதிப்புடைய இலவச மென்பொருள் இயங்குதளங்களை பயனீட்டாளர்களுக்கு இலவசமாகவே வழங்கியது.