Home வணிகம்/தொழில் நுட்பம் வாரென் பஃபெட்டுடன் மதிய உணவருந்தும் ஏலம்!

வாரென் பஃபெட்டுடன் மதிய உணவருந்தும் ஏலம்!

635
0
SHARE
Ad

warren-buffettசான்பிரான்சிஸ்கோ, ஜூன் 3 – உலகப் புகழ்பெற்ற உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டுடன் (Warreb Buffet)  ஒருவேளை மதிய உணவருந்த அறக்காரியங்களுக்காக ஏலம் விடுவது தொடங்கியுள்ளது.

சான்பிரான்சிஸ்கோ நகரில் ஏழைகள் மற்றும் வீடட்டவர்களுக்காக இயங்கி வரும் (Glide) கிளைட் என்ற தொண்டூழிய நிறுவனத்திற்கு உதவும் பொருட்டு ஆண்டு தோறும் வாரன் பஃபெட் இந்த ஏலத்தை நடத்துவார்.

இந்த தொண்டூழிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்த அவரது மனைவி சூசி பஃபெட், கடந்த 2004-ம் ஆண்டு காலமானது முதல் அவரது நினைவாக வாரன் பஃபெட் இந்த ஏலத்தை நடத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

தன்னுடன் ஒருவேளை மதிய உணவு உண்பதற்கு யார் அதிக அளவில் நன்கொடை தர முன் வருகிறார்களோ அவர்களுடன் வாரன் பஃபெட் உணவருந்துவார். இதுவரை 16  மில்லியன் அமெரிக்கா டாலர் வரை அந்த நிறுவனத்திற்காக அவர் நன்கொடை சேகரித்து  தந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு வார்ன் பஃபெட்டுடன் உணவருந்தியவர் ஏறத்தாழ 1 மில்லியன் அமெரிக்க டாலரை செலுத்தினார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வாரன் பபெட்டுடனான மதிய உணவு நிகழ்வு ஏலம் விடப்பட்டது.

2012 ம் ஆண்டில் 3,456,789 அமெரிக்க டாலர் செலுத்தி ஒருவர் வாரன் பபெட்டுடன் உணவருந்தினார்.

15 ஆவது ஆண்டாக நடைபெறும் வாரன் பஃபெட்டுடனான மதிய உணவிற்கான ஏலம் நேற்று 25 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற முதல் கட்ட விலையுடன் இபே (e-bay) எனப்படும் இணைய வர்த்தக நிறுவனத்தில் தொடங்கியது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி வரை இந்த ஏலம் நீடிக்கும்.