Home உலகம் இந்தியா வந்த ஷெரீஃப் அவமதிக்கப்பட்டார்: இம்ரான்கான்  குற்றச்சாட்டு!

இந்தியா வந்த ஷெரீஃப் அவமதிக்கப்பட்டார்: இம்ரான்கான்  குற்றச்சாட்டு!

400
0
SHARE
Ad

imranஇஸ்லாமாபாத், ஜூன் 4 – இந்தியாவிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், ஒரு பள்ளிக்கூட சிறுவன் போன்று நடத்தப்பட்டார் என தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி, கடந்த 26-ம் தேதி பதவியேற்றார். இவ்விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்திருந்தார்.

மேலும் கடந்த 27-ம் தேதி அவர் பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கூறுகையில், “மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியா வந்த ஷெரீஃபை ஒரு பள்ளி சிறுவனை போன்று நடத்தியுள்ளனர். டெல்லியில் இந்திய தலைவர்களை சந்தித்த ஷெரீஃபால் ஏன் ஹுரியத் மாநாட்டு தலைவர்களை சந்திக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு இரு நாட்டுத் தலைவர்களும் முயன்று வரும் இந்த தருணத்தில், இம்ரான்கானின் இந்த குற்றச்சாட்டு, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.