Home இந்தியா மோடியை புகழ்ந்துள்ள சசி தரூர் காங்கிரஸ் மேலிடத்துக்கு விளக்கக் கடிதம்!

மோடியை புகழ்ந்துள்ள சசி தரூர் காங்கிரஸ் மேலிடத்துக்கு விளக்கக் கடிதம்!

550
0
SHARE
Ad

Shashiபுதுடில்லி, ஜூன் 7 – பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடியின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரிய வகையில் இருப்பதாக சசி தரூர் கூறியிருந்தார். இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதால் கட்சிக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது செயலுக்கு விளக்கமளிக்கும் விதமாக கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தகவல் பிரிவு தலைவர் அஜய் மக்கானுக்கு சசி தரூர் எழுதியுள்ள கடிதத்தில், மோடியிடம் உள்ள குறிப்பிட்ட சில விஷயங்களைப் பாராட்டியதன் மூலம் தொடர்ச்சியாக அவரது நடவடிக்கைகள் பற்றிய எதிர்பார்ப்பை மக்களிடையே உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அந்த எதிர்பார்ப்பை அளவுகோலாகக் கொண்டு எதிர்காலத்தில் மோடியின் நடவடிக்கைகளை விமர்சிக்க முடியும் எனக் கூறியுள்ள சசி தரூர், காங்கிரஸ் கட்சியுடன் தனக்குள்ள ஈடுபாடு மற்றும் மதச்சார்பின்மை கொள்கை மீது தமக்குள்ள பிடிப்பு ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.

தேவையான நேரங்களில் எதிரிகளைப் பாராட்டினால்தான் நம் மீது நம்பகத்தன்மை அதிகரித்து அவர்களது உண்மை சொரூபம் வெளியாகும் போதும் அவர்களைத் தாக்குவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் சசி தரூர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சசி தரூர் விளக்கக் கடிதம் எழுதியுள்ளதால், இந்தப் பிரச்சனை இனி தொடராது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யர் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சென்னை வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கும் மோடி மற்றும் புதிய அரசின் செயல்பாடுகளை தற்போது ஏதும் குறைகளோ, நிறைகளோ சொல்ல முடியாது.  இன்னும் சில காலம் கவனித்த பின்னரே விமர்சிக்க முடியும் எனக் கூறினார்.