Home இந்தியா கருணாநிதியைச் சந்தித்து ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து

கருணாநிதியைச் சந்தித்து ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து

451
0
SHARE
Ad

rajni - karunanithiசென்னை, ஜூன் 8 – அகில இந்திய அளவில் அனைத்து அரசியல் தலைவர்களின் நட்பையும், நன்மதிப்பையும் பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதற்கேற்ப எல்லா தலைவர்களுடனும் சரிசமமாக மரியாதை கொடுத்து பழகி வருகின்றார்.

அண்மையில், இந்தியத் தேர்தல்  நடந்த போது, சென்னை வந்த நரேந்திர மோடி ரஜினியைச் சந்தித்தார்.

இந்நிலையில், இந்தியத் தேர்தலில் படுமோசமான தோல்வியை திமுக தழுவினாலும், அதன் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு மதிப்பு கொடுத்து, அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக இன்று  ரஜினிகாந்த் அவரை சென்னையில்  சந்தித்தார்.

#TamilSchoolmychoice

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 3-ம் தேதி 91-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்த நாளன்று நேரில் வர முடியாத ரஜினிகாந்த், இன்று கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், தன் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் தான் நடித்து வெளியாகியிருக்கும் கோச்சடையான் படத்தை பார்க்க வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.