Home உலகம் கராச்சி தாக்குதலுக்கு மோடியின் பாதுகாப்புக் குழு தான் காரணம் – ஹபீஸ் சயீத் குற்றச்சாட்டு!

கராச்சி தாக்குதலுக்கு மோடியின் பாதுகாப்புக் குழு தான் காரணம் – ஹபீஸ் சயீத் குற்றச்சாட்டு!

536
0
SHARE
Ad

Hafiz-Saeedகராச்சி, ஜூன் 10 – பாகிஸ்தானின் கராச்சியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் குழு இருப்பதாக அந்நாட்டின் ஜமாத் உட் தாவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார்.

கராச்சி ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நள்ளிரவில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தில் 15–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் 28 பேர் கொல்லப்பட்டனர். விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தானின் தலீபான் தீவிரவாதிகள் என்றழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஜமாத் உட் தாவா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத், கராச்சி தாக்குதலுக்கு பின்னணியில் நரேந்திர மோடியின் புதிய பாதுகாப்பு குழு உள்ளது. உண்மையான எதிரிகளை நாட்டு மக்கள் அறிவர் என்று தனது டுவிட்டர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை உருவாக்குவதற்காக, இரு நாடுகளின் தலைவர்கள் முயன்று வரும் இந்த தருணத்தில், அங்கு ஒரு சாரார் மோடியினை கடுமையாக விமர்சித்து வருவது, இரு நாடுகளின் உறவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது.