Home கலை உலகம் பாடகியாகிறார் நடிகை லட்சுமிமேனன்!

பாடகியாகிறார் நடிகை லட்சுமிமேனன்!

962
0
SHARE
Ad

lakshmi-menon-சென்னை, ஜூன் 10 – மிகக் குறைந்த வயதில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் லட்சுமிமேனன். இவர் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, என படத்திற்குப் படம் தனது நடிப்பால் ரசிகர்களிடையே பாராட்டை அள்ளி வருகிறார்.

கடந்த வெள்ளியன்று தான் விமல் – லட்சுமி மேனன் நடிப்பில் மஞ்சப்பை திரைப்படம் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் சித்தார்த் ஜோடியாக நடித்த ஜிகிர்தண்டா படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரம்யா நம்பீசனை தொடர்ந்து இப்போது லட்சுமி மேனனும் பாடகியாகியுள்ளார். டி. இமான் தற்போது ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ என்ற படத்திற்கு இசையமைத்து கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

lakshmi-menonஇந்த படத்தில்தான் லட்சுமி மேனனை ஒரு பாடல் பாட வைத்துள்ளார் இமான். இந்த புகைப்படத்தை இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை பத்திரிகையாளரும் கவிஞருமான ஏக்நாத் எழுதியுள்ளார்.

நடிகையான ரம்யா நம்பீசன் முதன் முதலில் பாடிய பை பை பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் லட்சுமி மேனன் பாடல் இடம்பெறுமா என்பது விரைவில் தெரிய வரும். அப்படி வெற்றிப் பெற்றுவிட்டால் இனி தொடர்ந்து பாடகியாகவும் தனது திறமையை லட்சுமிமேனன் நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம்.