இந்த நிலையில் லிபியாவின் இடைக்கால பிரதமராக அகமது மைதீக் என்பவர் கடந்த மாதம் பாராளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நடந்ததாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், லிபியா இடைக்கால பிரதமரின் நியமனம் சட்ட விரோதமானது என நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இதனை லிபியா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒளிபரப்பியது.
லிபியா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்ற அகமது மைதீக் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் லிபிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.