Home நாடு எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்கு 27.6 மில்லியன் ரிங்கிட் செலவு!

எம்எச்370 விமானத்தை தேடும் பணிக்கு 27.6 மில்லியன் ரிங்கிட் செலவு!

450
0
SHARE
Ad

MH370-plane

கோலாலம்பூர், ஜூன் 10- நடுவானில் மாயமான எம்எச் 370 விமானத் தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக இதுவரைக்கும் 27.6 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை இடைக்கால அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன் தெரிவித்தார்.

இந்தச் செலவுத் தொகையானது விமானத் தேடல் பணியில் ஈடுபட்டுள்ள இதர நாடுகளின்செலவைக் காட்டிலும் குறைவு என்ற அவர், மற்ற நாடுகள் இதுவரைக்கும் 7 3.5 மில்லியன் ரிங்கிட் செலவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

விமானத் தேடல் இயந்திரங்களுக்காகவும் எரிபொருள் உபயோகத்திற்காகவும் பணியாளர்களின் உணவுகளுக்காகவும்  இந்த தொகை செலவிடப்பட்டிருப்பதாக நேற்று முந்தினம் நாடாளுமன்ற வரவேற்பறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.