Home நாடு எம்எச் 370: விமானத்தை பார்த்ததாக கூறியவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்!

எம்எச் 370: விமானத்தை பார்த்ததாக கூறியவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்!

397
0
SHARE
Ad

mh370வெல்லிங்டன், ஜூன் 10– கடந்த மார்ச் 8 –ம் தேதி, 239 பயணிகளுடன் மலேசிய விமானம் MH370 மாயமாகி உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் மூழ்கியிருந்த வேளையில், தான் வியட்நாம் கடல் பகுதியில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அந்த விமானத்தைப் பார்த்ததாக நியூசிலாந்து ஆடவர் ஒருவர் ஊடகங்களுக்கு தகவல் அளித்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார் அவரை நினைவிருக்கிறதா?

மைக் மெக்கே என்ற அந்த நபரைப் பற்றிய சமீபத்திய தகவல் என்னவென்றால், அவர் அளித்த மின்னஞ்சல் தகவல் அவரது வேலைக்கே உலை வைத்துவிட்டது என்பது தான்.

ஆம்.. மெக்கே வேலை செய்து கொண்டிருந்த எண்ணெய் நிறுவனம் அவரைப் பணி நீக்கம் செய்துள்ளதாக நியூசிலாந்து நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வியட்னாமிய கடல் பகுதியில் உள்ள எண்ணெய் கிணறு மேடையில், சரியாக மார்ச் 8 –ம் தேதி அதிகாலை தான் பணியாற்றிக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக கூறப்படும் அவ்விமானம் தீப்பிடித்ததைக் கண்டதாக மைக் மெக்கே தெரிவித்தார்.

தான் அப்போது இருந்த இடத்திலிருந்து சுமார் 50-70 கிலோ மீட்டர் தூரத்தில் அவ்விமானம் சுமார் 10-15 வினாடிகள் தீப்பற்றியதைப் பார்த்ததாக மெக்கே தனது முதலாளிக்கு மின்னஞ்சல் செய்திருந்தார்.

அவர் அனுப்பிய மின்னஞ்சல் எப்படியோ தகவல் ஊடகங்களுக்கு பரவ, உலகம் முழுதும் உள்ள நாளிதழ்கள் அச்செய்தியை  முதல் பக்கத்தில் வெளியிட்டன.

இதனால் அந்த ஊழியரின் பெயர், பணி புரியும் நிறுவனமான சோங்கா ஆப்ஷோர் பற்றியும், அந்த எண்ணெய் கிணறு நிறுவனத்தின் முதலாளியின் பெயரும் அம்பலமாயின.

மெக்கே அனுப்பிய மின் அஞ்சலினால் இந்நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்தன. அந்த நிறுவனத்தின் வெளித் தொடர்புகள் முடக்கப்பட்டன.

இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான நிறுவன முதலாளிகள், மெக்கேவை தற்காலிக நீக்கம் செய்தனர். அதன் பின்னர் இன்று வரை தன்னை அந்நிறுவனம் வேலைக்கு அழைக்கவில்லை என மெக்கே நியூசிலாந்து ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

விமானம் மாயமாகி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை மெக்கேவை போல், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று பேர் தாங்கள் விமானம் தீ பிடித்து எரிந்த நிலையில் பறந்ததைப் பார்த்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.