எடின்பர்க், ஜூன் 10 – ஸ்காட்லாந்தின் தனிச் சுதந்திரம் தொடர்பான மக்கள் கருத்துக்களை அறியும் வாக்கெடுப்புக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், சுதந்திரத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் தங்கள் ஆதரவைத் திரட்டும் தீவிர பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர்.
ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நேற்று கூடிய 100 பேர், சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் ‘யெஸ்’ (YES) என்ற வார்த்தையை பிரதிபலிக்கும் வகையில் ஒன்று கூடிநின்றனர்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மூன்று பிரதான அரசியல்கட்சிகளும் ஸ்காட்லாந்து தனியாக பிரிந்துசென்று சுதந்திர நாடாவதை எதிர்க்கின்றன.
அக்கட்சிகள், “ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராஜ்ஜியத்துடன் சேர்ந்தே இருக்குமானால் அப்பிராந்தியத்திற்கு தேவையான அதிகாரங்கள் கொடுக்கப்படும்” என்றும் கூறுகின்றன. மேலும், இங்கிலாந்தில் 21 சதவீத மக்களே ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.