Home உலகம் ஈரோ 2020 : இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0

ஈரோ 2020 : இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0

1164
0
SHARE
Ad

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) அதிகாலை 3.00 மணிக்கு பிரிட்டன் காற்பந்து இரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்த  இங்கிலாந்து – ஸ்காட்லாந்து இடையிலான பரபரப்பான ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும் அடிக்க முடியாமல் 0-0 என்ற என்ற நிலையில் சமநிலை கண்டன.

இந்த ஆட்டம் இலண்டனிலுள்ள வெம்ப்ளி அரங்கில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

“டி” (“D”) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்துவுடன் சமநிலை கண்டதன் மூலம் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன்  இந்தப் பிரிவின் முதல் இரண்டு இடங்களில் உள்ளது. மற்றொரு இடத்தில் செக் குடியரசு உள்ளது.

இந்தப் பிரிவில் அடுத்து இங்கிலாந்தும் செக் குடியரசும் மோதவிருக்கின்றன. அதில் வெற்றி பெறும் குழு அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் 16 குழுக்களில் ஒன்றாக அடுத்தக் கட்டப் போட்டிகளுக்கு செல்லும்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

சுவீடன் 1 – சுலோவாக்கிய 0

குரோஷியா 1 – செக் குடியரசு 1

இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0