ஈப்போ: பேராக் மந்திரி பெசார் டத்தோ சாரணி முகமட் தொடர்பான முகநூல் மற்றும் டுவிட்டரில் பதிவேற்றப்பட்ட வரைபடங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவ வரைபட வடிவமைப்பாளர் மற்றும் ஆர்வலர் பாஹ்மி ரேசாவை காவல் துறையினர் அழைப்பர்.
பேராக் அம்னோ இளைஞர் தலைவர் முகமட் அரிப் அப்துல் மஜித் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்கள் விசாரணை அறிக்கையைத் திறந்ததாக பேராக் காவல் துறைத் தலைவர் டத்தோ மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.
“இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாஹ்மி ரேசா மற்றும் பிற நபர்களையும் நாங்கள் சாட்சியமளிக்க அழைக்கிறோம்.
“அமைதி மீறலைத் தூண்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமானப்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகும்,” என்று அவர் கூறினார்.