Home உலகம் ஈரோ 2020 : குரோஷியா 1 – செக் குடியரசு 1

ஈரோ 2020 : குரோஷியா 1 – செக் குடியரசு 1

1446
0
SHARE
Ad

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 18) இரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியாவும் செக் குடியரசும் மோதின.

இந்த ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே 1-1 என்ற நிலையில் சமநிலை கண்டன.

இந்த ஆட்டம் ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

“டி” (“D”) பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டதன் மூலம் செக் குடியரசுவும் இங்கிலாந்தும் தலா 4 புள்ளிகளுடன்  இந்தப் பிரிவின் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

அடுத்து நடைபெறவிருக்கும் ஆட்டத்தின் வெற்றி தோல்வியை வைத்து இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு 16 குழுக்களில் ஒன்றாகத் தகுதி பெறுமா என்பது தெரியவரும்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள்:

சுவீடன் 1 – சுலோவாக்கிய 0

குரோஷியா 1 – செக் குடியரசு 1

இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0