Home கலை உலகம் மலேசியாவில் விஜயகாந்த்!

மலேசியாவில் விஜயகாந்த்!

560
0
SHARE
Ad

vijayakanthசென்னை, ஜூன் 11 – தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (செவ்வாய்க்கிழமை) மலேசியா வந்துள்ளார். விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் “சகாப்தம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகளை கவனிப்பதற்காக விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி நேற்று மலேசியா வந்துள்ளார். அவருடன் மனைவி பிரேமலதாவும் இங்கு வந்துள்ளார்.

sagapathamஇருவரையும் சென்னை விமான நிலையத்தில் தேமுதிக இளைஞர் அணி மாநில தலைவர் எல்.கே.சுதீஷ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

#TamilSchoolmychoice

தற்போது விஜயகாந்த் தனது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “சகாப்தம்’ படத்தை எடுக்க பத்துமலை முருகன் கோவிலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.