Home உலகம் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளான முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி!

தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளான முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி!

520
0
SHARE
Ad

imagesகராச்சி, ஜூன் 13 – தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியளரான  முஷரப், அதிபராக பதவி வகித்தபோது கடந்த 2007–ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்திருந்தார். அது தொடர்பாக தற்போது அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். வெளிநாடுகளுக்கு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நபர்களின் பட்டியலில் அவர் பெயரும் சேர்க்கப்பட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி முஷரப் தொடர்ந்த வழக்கு விசாரணை சிந்து மாகாண உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை முஷரப் மறுத்தபோதிலும், ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கும் உடல்நலம் குன்றிய தன் தாயாரைப் பார்ப்பதற்காக தன் மீதான பயணத் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால் முஷரப் மீதான பயணத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே, 14 மாத இடைவெளிக்குப் பிறகு முஷரப் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது. எனினும், 15 நாட்களுக்குள் அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்து விசாரணை நடைபெற்றால் முஷரப் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.