Home உலகம் ஜப்பான் போர் விமானம் மீது மோத முயற்சித்த சீனப் போர் விமானம்!

ஜப்பான் போர் விமானம் மீது மோத முயற்சித்த சீனப் போர் விமானம்!

678
0
SHARE
Ad

0824_D69டோக்கியோ, ஜுன் 13 – தென் சீன கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்த ஜப்பான் நாட்டு போர் விமானம் மீது சீன போர் விமானம் ஒன்று மோதுவது போல் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு வலுத்து வருகின்றது.

ஜப்பான் மற்றும் சீனா இடையே, கிழக்கு சீனக் கடல் பரப்பில் உள்ள தீவுகளை உரிமை கொண்டாடுவதில் நீண்ட வருடங்களாய் மோதல் போக்கு இருந்து வருகின்றது.

ஜப்பானுக்கு சொந்தமாக கருதப்படும் பல தீவுகளில் சீனா அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்து ஜப்பான் உலக நாடுகளின் சந்திப்பில் சுட்டிக் காட்டியும் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் தென் சீனக் கடற்பகுதியில் ஜப்பான் எல்லையில் ஜப்பான் போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது சீன போர் விமானம் ஒன்று அதன் மீது மோதுவது போல வந்ததாகவும், இரு விமானங்களுக்கும் இடையே 30 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகின்றது.

ஜப்பான் விமானத்தை அச்சுறுத்துவதற்காகவே சீன விமானம் இப்படி நடந்து கொண்டதாக ஜப்பான் புகார் கூறி உள்ளது. இது சம்மந்தமாக சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.