Home நாடு மலேசியா பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி – நஜிப் தகவல்

மலேசியா பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சி – நஜிப் தகவல்

568
0
SHARE
Ad
najib12

கோலாலம்பூர், ஜூன் 13 – மலேசியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சிக்குக் காரணம் வலுவான பொருளாதாரக் கொள்கைகளும், அதை ஊக்குவிக்கத் தேவையான திட்டங்களும் தான் காரணம் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

2014 -ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி குறித்து கருத்துரைத்த நஜிப், இந்த ஆண்டு முதலாம் காலாண்டில் தேசிய பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியும், உள்நாட்டு உற்பத்தி 6.2 விழுக்காடு வளர்ச்சியையும் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 2012 -ம் ஆண்டில், நான்காம் காலாண்டில் ஏற்பட்ட வளர்ச்சிக்குப் பிறகு, தற்போது கண்டுள்ள இந்த வளர்ச்சி மிகப் பெரிய வளர்ச்சி என்றும் நஜிப் தெரிவித்தார்.

அண்டை நாடுகளை ஒப்பிடுகையில், மலேசியா பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி கண்டுள்ளதையும் நஜிப் தெரிவித்தார்.

அண்டை நாடுகளான பிலிப்பைன்ஸில் 5.7 விழுக்காடாகவும், இந்தோனேசியாவில் 5.2 விழுக்காடாகவும், சிங்கப்பூரில் 5.1 விழுக்காடாகவும், தாய்லாந்தில் 0.1 விழுக்காடாகவும், பொருளாதார வளர்ச்சி இருப்பதை நஜிப் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக வங்கியின் 2014 -ம் ஆண்டு அறிக்கை அங்கீகரித்து இருப்பதையும் நஜிப் சுட்டிக் காட்டினார்.