Home கலை உலகம் நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா, சம்பளம் எவ்வளவு தெரியுமா?

861
0
SHARE
Ad

heroinசென்னை, ஜூன் 13 – நடிகர்களுக்கு மட்டும் அல்ல நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனால் நடிகர்களுடன் ஒப்பிடுகையில் நடிகைகளின் சம்பளம் மிகவும் குறைவு தான்.  இந்நிலையில் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார், யார் என்பதை பார்ப்போம்.

நயன்தாரா:
தமிழ், தெலுங்கு, மலையாள திரை உலகில் பிரபலமாக இருக்கும் நயன்தாரா, படம் ஒன்றுக்கு ரூ. 2.5 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தென்னிந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்குபவர் நயன்தாரா தான்.

அனுஷ்கா:
நயன்தாராவை அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை அனுஷ்கா. அவர் தெலுங்கில் நடித்து வரும் ருத்ரம்மா தேவி படத்திற்கு ரூ.2.5 கோடி வாங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

தமன்னா:
தமிழ், தெலுங்கு தவிர இந்தியிலும் நடித்து வருகிறார் தமன்னா. அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஆகடு படத்தில் நடிக்க ரூ.1.75 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

இலியானா:
டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து அவ்வப்போது தமிழ் படங்களில் தலையை காட்டிய இலியானா, விஜய்யுடன் நண்பன் படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி பெற்றுள்ளார்.

Heroinesகாஜல் அகர்வால் :
காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு ரூ.75 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்கினார். தற்போது அவர் தனது சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

த்ரிஷா:
10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்து வரும் த்ரிஷா படம் ஒன்றுக்கு ரூ. 80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பெறுகிறார்.

சமந்தா:
தெலுங்கில் அசைக்கமுடியாத சிறந்த கதாநாயகியாக இருக்கும் சமந்தா படம் ஒன்றுக்கு ரூ.70 லட்சம் வாங்கி வந்தார். ஆந்திராவில் தொடர் வெற்றி படங்களில் நடித்த அவர் தற்போது அவரது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளார்.

ஸ்ருதி ஹாஸன்:
தெலுங்கு படமான கப்பார் சிங் வெற்றி பெற்ற பிறகு ஸ்ருதி ஹாஸன் டோலிவுட் படம் ஒன்றுக்கு ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார். முன்னதாக அவர் ரூ.75 லட்சம் பெற்றார்.

அமலா பால்:
அமலா பால் தெலுங்கு படமான வஸ்தா நீ வேணுகா படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

ஹன்சிகா:
தெலுங்கு படங்களில் நடிக்க அண்மை காலமாக ஹன்சிகா ரூ.80 லட்சம் வாங்குகிறாராம்.

லட்சுமி மேனன்:
லட்சுமி மேனன் புதிய படங்களில் நடிக்க ரூ. 40 லட்சம் கேட்கிறாராம்.