Home நாடு ஹுடுட் தீர்மானத்தை சிலாங்கூர் அம்னோ திரும்பப் பெற்றது!

ஹுடுட் தீர்மானத்தை சிலாங்கூர் அம்னோ திரும்பப் பெற்றது!

557
0
SHARE
Ad

Mohd Shamsudin Lias

சிலாங்கூர், ஜூன் 13 – ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தும் படி, சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருந்த கோரிக்கையை சிலாங்கூர் மாநில அம்னோ திரும்பப் பெற்றுக்கொண்டது என்ற தகவலை அம்மாநில எதிரணித் தலைவர் முகமட் சம்சுடின் லியாஸ் இன்று அறிவித்துள்ளார்.

அந்த தீர்மானத்தால் ஏற்பட்ட ‘மாற்றுக்கருத்துகள்’ தான் இந்த பின்வாங்களுக்கான காரணம் என்றும் லியாஸ் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யும் படி தான் அம்னோ கோரிக்கை விடுத்திருந்ததே தவிர, அதை அமலாக்கம் செய்யும் படி கூறவில்லை என்று சம்சுடின் கூறினார்.

மேலும், சட்டமன்ற விவாதக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க தேசிய முன்னணி முடிவெடுத்திருப்பதாகவும் சம்சுடின் தெரிவித்தார்.