Home இந்தியா அந்தமானில் பலத்த மழை! தரையிறங்க முடியாமல் திரும்பியது ஏர் இந்தியா!

அந்தமானில் பலத்த மழை! தரையிறங்க முடியாமல் திரும்பியது ஏர் இந்தியா!

500
0
SHARE
Ad

KONICA MINOLTA DIGITAL CAMERAசென்னை, ஜூன் 14 – சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் 152 பயணிகளுடன் நேற்று காலை அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது. அந்தமானில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

போர்ட் பிளேர் விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதையடுத்து அங்கு சென்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. பிற விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

விமான ஓடுதளத்தில் தண்ணீர் புகுந்துள்ளதால் சென்னையிலிருந்து நேற்று காலை 152 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம் தரையிறங்க வழியில்லாமல் காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியது.

#TamilSchoolmychoice

பயணிகள் அனைவரும் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சென்னையிலிருந்து அந்தமான் செல்லவிருந்த ஜெட் ஏர்வேஸ், டெக்கன் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.  தங்க வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் இன்று காலையில் ஏர் இந்தியா விமானம் மூலம் அந்தமான் செல்லவுள்ளனர்.