அந்த வகையில், ஐபோன்களின் செவி இணைப்புக் கருவிகள் (Earphones) வேறு ஆப்பிள் தயாரிப்பு அல்லாத கருவிகளில் பொருத்த இயலாத வகையில், ‘ஐபோன் தயாரிப்புகளுக்கு மட்டும்’ என்ற ரீதியில் மாற்றம் செய்யவுள்ளதாக முன்னணி தொழில்நுட்ப பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றம் செய்யப்பட்டால், ஐபோன்களின் ஐஓஎஸ் இசை செயலிகள் மற்றும் வானொலி செயலிகளை இந்த குறிப்பிட்ட ஹெட்போனால் மட்டுமே கேட்டு ரசிக்க முடியும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த மாற்றம் வெற்றியடையும் பட்சத்தில் எதிர்காலத்தில் ஐபோன்களின் மற்ற மேம்பாடுகளும் ‘ஐபோன் தயாரிப்புகளுக்கு மட்டும்’ என்ற நிலையில் பிரத்யேகமாக மாற்றம் செய்யப்படலாம்.