Home உலகம் தந்தையாக இருப்பதுதான் மிகவும் கடினமான பணி – ஒபாமா!

தந்தையாக இருப்பதுதான் மிகவும் கடினமான பணி – ஒபாமா!

558
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், ஜூன் 16 –  உலக தந்தையர் தினம் நேற்று (ஜூன் 15) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா தனது தந்தையர் தின உரையில் கூறியிருப்பதாவது,

தந்தையாக இருப்பதுதான் மிகவும் கடினமான பணி. எப்போதும் கவனிப்புடனும், அவ்வப்போது தியாகங்களையும் தேவையான அளவுக்குப் பொறுமையையும் வேண்டும். தந்தையின் இருப்பு, ஆதரவு, அக்கறைக்கு நிகரானது எதுவும் இல்லை.

தங்களின் குழந்தைகளுக்கு ஆசானாக, நண்பனாக, முன் மாதிரியான தந்தையர்களே இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு கடின உழைப்பையும், நேர்மையையும் கற்றுத் தருகிறார்கள்.

#TamilSchoolmychoice

ஒரு குழந்தைக்கு தந்தையின் அரவணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. வாழவும், வளரவும் கற்றுத்தரும் தந்தையர்களுக்கு இந்த தந்தையர் தினத்தில் எங்களின் நன்றிகளைத் தெரிவிக்கிறோம் என தமது உரையில் ஒபாமா தெரிவித்துள்ளார்.