Home இந்தியா காஷ்மீர் வைஷ்ணவோ தேவி கோயிலுக்கு இரயில் சேவை – சோதனை ஓட்டம் துவங்கியது!

காஷ்மீர் வைஷ்ணவோ தேவி கோயிலுக்கு இரயில் சேவை – சோதனை ஓட்டம் துவங்கியது!

596
0
SHARE
Ad

ஜம்மு, ஜூன் 16 – ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவோ தேவி குகைக் கோயிலுக்கு செல்ல உதாம்பூரில் இருந்து காட்ராவுக்கு இடையிலான இரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

அதற்கான சோதனை ஓட்டம் கடந்தவாரம் துவங்கியது. உதாம்பூருக்கும், காத்ராவுக்கும் இடையே சுமார் 45 நிமிடங்கள் செல்லும் இந்த இரயில் சேவை துவங்கப்பட்டால், கோயிலுக்கு வழிபாடு செய்ய வருபவர்கள் எளிதில் பயணம் செய்யலாம்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 10 மில்லியன் மக்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்த இரயில் சேவையின் மூலம் காத்ரா நகரின் பொருளாதாரம் உயர்ந்து, குகைக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Trial run of Udhampur-Katra train near Jammu

(சோதனை ஓட்டத்திற்குத் தயாராகும் இரயில்)

Trial run of Udhampur-Katra train near Jammu

(இரயில் தண்டவாளத்தை சோதனை செய்யும் இரயில்வே ஊழியர்)

Trial run of Udhampur-Katra train near Jammu

(இரயிலைக் கண்ட மகிழ்ச்சியில் கையசைக்கும்  அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள்)

Hindu Goddess Vaishno Davi shrine pilgrimage

(வைஷ்ணோ தேவி கோவிலில் வழிபாடு செய்ய வந்த பக்தர்கள்)

படங்கள்: EPA