சியோல், ஜூன் 18 – பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டியில், தென்கொரிய அணி ரஷ்யாவிற்கு எதிராக விளையடியதை முன்னிட்டு கொரியாவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ‘கங்ணம் ஸ்டைல்’ புகழ் பிஎஸ்ஒய், தென் கொரியாவிலுள்ள க்வாங்வாமுன் ஸ்கொயர் என்ற இடத்தில் இன்று காலை கலை நிகழ்ச்சியை படைத்தார்.
அவரது நிகழ்ச்சியைக் காண அந்த பகுதி முழுவது மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. உற்சாகமாக மக்கள் அனைவரும் பிஎஸ்ஒய் மற்றும் அவரது குழுவினரின் நடனத்தை கண்டு ரசித்தனர்.
இதனிடையே, மலேசிய நேரப்படி இன்று காலை 6.00 மணிக்குத் தொடங்கிய உலகக் கிண்ணப் போட்டிகளின் ‘H’ பிரிவு ஆட்டத்தில் ரஷ்யாவும், தென் கொரியாவும் மோதின.
இதில் ரஷ்யா, தென்கொரியா 1 -1 என்ற கோல் கணக்கில் பெற்று ஆட்டம் சரிசமமாக முடிந்தது.
(பிஎஸ்ஒய் தனது குழுவினருடன் மேடையில் நடனம் ஆடுகிறார்)
(பிஎஸ்ஒய் -ன் கங்ணம் ஸ்டைல் நடனம்)
(மக்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் மெய் மறந்து ஆடும் பிஎஸ்ஒய் மற்றும் குழு)
(நிகழ்ச்சியைக் காண அந்த பகுதி முழுவதும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்)
படங்கள்: EPA