ரியோ டி ஜெனிரோ, ஜூன் 19 – இன்று மலேசிய நேரப்படி பின்னிரவு 3.00 மணிக்குத் தொடங்கிய ‘பி’ பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயினும், சிலியும் களம் கண்டன.
தனது முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து நாட்டிடம் மோசமாகத் தோல்வி கண்ட, கடந்த 2010ஆம் ஆண்டின் உலகக் கிண்ண வெற்றியாளரான ஸ்பெயின் இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடியது.
இருப்பினும், சிலி நாட்டின் விளையாட்டாளர்கள் அபாரமாக விளையாடி, முதல் பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் அடித்து ஸ்பெயின் விளையாட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதன் வழி, தனது முதல் இரண்டு ஆட்டங்களிலும் ஸ்பெயின் தோல்வி கண்டுள்ளதால், ஸ்பெயின் உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது ஆட்டத்தில் இனி ஸ்பெயின் ஆஸ்திரேலியாவிடம் மோத வேண்டியிருக்கும். இருப்பினும் ‘பி’ பிரிவில் சிலியும் நெதர்லாந்தும் முன்னணியில் இருப்பதால் அந்த இரண்டு நாடுகளும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் 16 நாடுகளில் ஒன்றாகத் திகழும்.
2-0 என்ற கோல் எண்ணிக்கையில் சிலி வெற்றி பெற்ற இன்றைய ஆட்டத்தில் சில படக் காட்சிகள் இங்கே:-
படங்கள்: EPA