கொழும்பு, ஜூன் 20 – இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் புத்த மதத்தினரால் தாக்கப்பட்டனர். தென்மேற்கு பகுதியில் உள்ள பல பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் முஸ்லிம் உரிமை அமைப்பின் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தலைநகர் கொழும்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக அதிகாரிகளின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று முஸ்லிம் உரிமை அமைப்பின் தலைவர் இப்ராகிம் தெரிவித்தார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதியை இன்று பார்வையிட்ட அதிபர் ராஜபக்சே, பாரபட்சமின்றி விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார்.