Home அவசியம் படிக்க வேண்டியவை குரங்குகளை அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லை – சாமிவேலு கருத்து

குரங்குகளை அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லை – சாமிவேலு கருத்து

630
0
SHARE
Ad

Samy-Vellu-300x202கோலாலம்பூர், ஜூன் 21 – அண்மையில் பிரபல ஸ்டார் இணைய பத்திரிக்கையில், நடப்பு மஇகா தேசியத் தலைவர் பழனிவேலுவுக்கு எதிராக, முன்னாள் மஇகா தேசியத் தலைவரும், இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு தனது மன குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.

இந்நிலையில், நேற்று தடாலடியாக பழனிவேலுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் சிறந்த தலைவர் தான். ஆனால், அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரது பணியைச் செய்ய விடுவதில்லை” என்று பத்திரிக்கை பேட்டில் ஒன்றில் சாமிவேலு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் யாரென்று எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களை  எனது அலுவலகத்திற்குள் ஒரு போதும் நுழைய விடுவதில்லை. ஏன் தெரியுமா? ஒரு குரங்கை நமது அலுவலக அறைக்குள் அனுமதிக்க முடியாது” என்றும் சாமிவேலு காட்டமாகக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தனக்கு எதிராக கூறப்படும் விமர்சனங்களை பழனிவேல் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் சாமிவேலு குறிப்பிட்டுள்ளார்.

“கடவுளே…. மஇகா தலைவராக பொறுப்பில் இருப்பவர்களை சாலையில் போகும் பூனை கூட விமர்சனம் செய்யும். அதற்காக தன்னை யாரும் விமர்சிக்கக் கூடாது என்று ஒரு அரசியல் தலைவர் நினைத்தால் அவர் அரசியலிலேயே இருக்க முடியாது” என்றும் சாமிவேலு கூறியுள்ளார்.

சாமிவேலுவால் கொண்டு வரப்பட்ட தலைவரை, அவரே விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என மஇகா உறுப்பினர்கள் பலர் கருத்துத் தெரிவிப்பது குறித்த செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த சாமிவேல், “நான் பதவியில் இருந்த போது என்னையும் தான் விமர்சித்தீர்கள். நான் அதை எதிர்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.