கோலாலம்பூர், ஜூன் 23 – கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல், கத்தோலிக்க இதழான ‘தி ஹெரால்டை’ தவிர மற்றவைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு (சிஎஃப்எம்) அறிவித்துள்ளது.
அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடை, ‘தி ஹெரால்ட்’ இதழுக்கு மட்டும் தான் என்று நீதிமன்றம் முன்பு அறிவித்திருந்ததையும் சிஎஃப்எம் குறிப்பிட்டுள்ளது.
பைபிள்களிலும், தேவாலைய சேவைகளிலும், கிறிஸ்தவர்களின் மலாய் மொழி பிரார்த்தனைக் கூட்டங்களிலும், இதற்கு முன்பு வழக்கத்தில் இருந்தது போல் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படும் என்று சிஎஃப்எம் தலைவர் ரெவெர்ண்ட் இயு ஹோங் செங் கூறியுள்ளார்.