Home நாடு கோத்தாராஜா தொகுதி பிகேஆர் மறுதேர்தலில் அடிதடி!

கோத்தாராஜா தொகுதி பிகேஆர் மறுதேர்தலில் அடிதடி!

618
0
SHARE
Ad

PKR-Logo-Sliderகிள்ளான், ஜூன் 23 – கோத்தாராஜா பிகேஆர் தேர்தலின் போது ஏற்பட்ட அடிதடியில், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கீழே தள்ளிவிடப்பட்டார். அவரை தாங்கிப் பிடிக்கச் சென்ற அவரது ஆதரவாளருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

பிகேஆர் கட்சியின்  கோத்தாராஜா தொகுதி தேர்தல், நேற்று காலை கிளாங் ஜெயா சமூக மண்டபத்தில் நடைபெற்றது. அத்தொகுதியின் நடப்புத் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரை எதிர்த்து டாக்சி ஒட்டுநரான மனோகரன் போட்டியிட்டார்.

இந்நிலையில், சுமூகமாகப் போய் கொண்டு இருந்த தேர்தலின் இடையில், இரு தரப்பினர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

தகவலறிந்து மண்டபத்திற்கு உள்ளே சென்ற சேவியரை சிலர் தள்ளிவிட்டதாகவும், அவரைத் தாங்கிப் பிடிக்க சென்ற ஆதரவாளருக்கு அடி விழுந்ததோடு, அவரது தலையிலும் காயம்பட்டது என்று முன்னாள் கவுன்சிலர் பி.எஸ்.ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினரை அழைத்து வாக்குப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு போய், பிகேஆர் தலைமையகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.