Home நாடு இரண்டு மஇகா தலைவர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்!

இரண்டு மஇகா தலைவர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்!

579
0
SHARE
Ad

parliamentகோலாலம்பூர், ஜூன் 23 – மஇகா கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் மற்றும் மசீச-வைச் சேர்ந்த இரண்டு தலைவர்களும் இன்று செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்.

கிள்ளான் தொகுதி மஇகா தலைவர் டத்தோ எஸ்.விக்னேஸ்வரன் மற்றும் பாகாங் மஇகா தலைவர் டத்தோ ஆர்.குணசேகரன் ஆகிய இரு மஇகா தலைவர்களும், நாடாளுமன்றத்தின் இன்று நாடாளுமன்ற தலைவர் டான்ஸ்ரீ அபு ஸாஹார் ஊஜாங் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்றனர்.

மசீச சார்பில் அக்கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் ஹௌ கோக் சங் மற்றும் மசீச விளம்பரப் பணியக தலைவர் டத்தோ சாய் கிம் சென் ஆகியோரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice