Home கலை உலகம் 6 மாதத்தில் 3 படம் வெளியிட கமல் திட்டம்!

6 மாதத்தில் 3 படம் வெளியிட கமல் திட்டம்!

502
0
SHARE
Ad

Kamal Hassanசென்னை, ஜூன் 24 – 6 மாதத்தில் 3 கமல் படம் வெளியாக உள்ளது. ஒன்றரை ஆண்டு இடைவெளி விட்டதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து வரும் 6 மாதத்துக்குள் 3 படங்கள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் கமல்.

இறுதிகட்ட பணிகள் நடந்து வந்த விஸ்வரூபம் 2 வெளியாவதற்கு தயாராகிவிட்டது. இதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் இரண்டு வேடத்தில் கமல் நடித்து வரும் “உத்தம வில்லன்” படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இன்னும் சில வாரங்களுக்குள் இப்படம் முடிந்துவிடும். படப்பிடிப்பிற்கு பின்னர் நடக்கும் ஒளிப்பதிவு பணிகளும் வேகமாக நடக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் முடிந்துவிட்டால் செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் தமிழில் ரீமேக் ஆகிறது. மல்லுவுட்டில் மோகன்லால் ஏற்ற வேடத்தை கமலும், மீனா ஏற்ற வேடத்தை கவுதமியும் ஏற்று நடிக்கின்றனர். ஜூலை 15-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைந்து படப்பிடிப்பு தொடங்கி எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக முடிக்கப்படும் என்றார் இயக்குனர் ஜீது ஜோசப்.

இந்த ஆண்டு இறுதியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றரை ஆண்டாக கமலுக்கு படமே வெளியாகவில்லை. இந்த ஆண்டு வரும் 6 மாதத்துக்குள் 3 படம் வெளியிட்டு ஹாட்ரிக் அடிக்க திட்டமிட்டிருக்கிறார் கமல்.