Home வாழ் நலம் மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம்!

மன உளைச்சலை நீக்கும் வாழைப்பழம்!

730
0
SHARE
Ad

bananaஜூன் 24 – வாழைப்பழம் நமக்கு பலவழிகளில் உடலுக்கு தேவையான புரதச்சத்துக்களை தருகிறது. அந்த வகையில் வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

* வாழைப்பழம் உங்கள் மன உளைச்சலை நீக்கும்.

* சிறுநீரக புற்று நோயிலிருந்து உங்களை காக்கும்.

#TamilSchoolmychoice

* வயிற்றுப் பிரட்டலை நீக்கும். உங்களை சுறுசுறுப்பானவராக்கும்.

* இதில் உள்ள டிரிப்டோபன், செரடோனினாக மாறி உங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும்.

* இரவில் வரும் கால் பிடிப்பு, சதை பிடிப்பு இவைகளை தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் தீர்க்கும்.

bananas* உடற்பயிற்சிக்கு முன்னால் 2 வாழைப்பழம் சாப்பிட்டு பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாமல் இருக்கச் செய்யும்.

* பொட்டாசியம் ரத்தக் கொதிப்பை சீராக வைக்கும். இது பக்கவாதத்தை குறைக்கும்.

* பொட்டாசியம் சத்து மிகுந்தது. உப்பு சத்து குறைந்தது.

* நரம்பு மண்டலத்தினை பலப்படுத்துவது.

* ரத்த சோகை நீக்கும், இரும்பு சத்து கொண்டது. கால்சியம் சத்தினால் எலும்புகளை பலப்படுத்த வல்லது.

* வெள்ளை அணு உற்பத்திக்கு பெரிதும் உதவுவது.

* வைட்டமின்-பி அதிக அளவில் கொண்டது. இது 46 சதவீத அளவினை கூட்ட வல்லது.

* குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி நல்ல சத்தினை குடல் உறிஞ்ச பேருதவி தரும்

banana (1)* நெஞ்செரிச்சலை நீக்கும்

* குடல் புண்ணுக்கு ஏற்றது

* மலச்சிக்கலை எளிதில் நீக்கும். சீரான சக்திக்கு உகந்தது.

* இரவில் அதிகம் குடித்தவருக்கு காலையில் வரும் தலைவலி வாழைப்பழம் உண்ண வெகுவாய் குறையும்.

* கண் பார்வைக்கு மிக முக்கியமானது. குறிப்பாக கண் பார்வை அழிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை நோயினை தவிர்க்கும்.

banana* புகை பிடித்தலை நிறுத்தி அதனால் ஒரு படபடப்பு, மன உளைச்சல், சோர்வு என தவிக்கின்றீர்களா? கவலை வேண்டாம். வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் பி சத்தும், பொட்டாசியம், மக்னீசியமும் உங்களை நன்கு பார்த்துக் கொள்ளும்.
* வாழைப் பழ தோலின் உட்பகுதி கொண்டு பல்லை பாலிஷ் செய்ய பல் பளிச்சென ஆகும்.

* நோய் எதிர்ப்பு சக்திக்கு உகந்தது.
* சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் மருத்துவர் ஆலோசனையோடு பாதி பழம் எடுத்துக் கொள்ளலாம்.

இத்தனை விஷயங்கள் தெரிந்த பிறகு இனி வாழைப் பழம் சாப்பிடாமல் இருக்கலாமா? இனிப்பு பண்டங்களுக்குப் பதிலாக வாழைப் பழம் எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே வாழைப் பழம் கொடுத்து பழக்குங்கள்.