Home அவசியம் படிக்க வேண்டியவை சிரியா இஸ்லாமிய போராளிகள் குழுவில் 20 மலேசியர்கள்!

சிரியா இஸ்லாமிய போராளிகள் குழுவில் 20 மலேசியர்கள்!

588
0
SHARE
Ad

Tan-Sri-Khalid-Abu-Bakarகோலாலம்பூர், ஜூன் 26 – சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரத்தில் ‘சிரியன் ஜிஹாட்’ இயக்கத்தில் இணைந்து போராடி வரும் குழுக்களில் 20 மலேசியர்கள் வரை இருப்பதாக புக்கிட் அமான் உறுதிப்படுத்தியது.

சிரியன் டூயூப்.நெட் என்ற யூடியூப் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒன்றரை நிமிட காணொளி ஒன்றில் ஜீப் ஓட்டிக் கொண்டு செல்லும் ஒருவர் மலாய் மொழியில் தெளிவாக உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் பேசுகின்ற மலாய் மொழியை வைத்து பார்க்கும் போது மேற்கு மலேசியாவின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.

யூடியூப் காணொளியில் வெளியாகியுள்ள இந்த காணொளியைத் தொடர்ந்து சிரியாவில் போராடி வரும் இஸ்லாமியக் குழுக்களில் 20 மலேசியர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும், அந்த வீடியோவில் காணப்படும் நபர் கெடா கோலகெட்டில் பகுதியைச் சேர்ந்த முஹமட் லொட்ஃபி அரிஃபின் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வெளியிடப்பட்ட அந்த காணொளியில் அரேபியர்கள் போல் தோற்றமளிக்கும் சில நபர்களுடன் மலேசியரும் ராணுவ உடையில் அந்த ஜீப் வண்டியில் அமர்ந்து கொண்டு மலாய் மொழியில் உரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

அல்லாஹு அக்பர் என்ற சுலோகத்தை முழங்கிக் கொண்டு அந்தப் போராளிகள் குழு நாங்கள் இப்போது போர்களத்திற்கு செல்கின்றோம். எங்களுக்கு எந்த வித பயமோ, தயக்கமோ இல்லை என அந்த காணொளியில் கூறுகின்றனர்.

இதற்கிடையில், சிரியாவில் இயங்கும் தீவிரவாத இயகக்கங்களில் சம்பந்தப்பட்ட மலேசியர்களை அடையாளம் காணும் முயற்சியில் மலேசிய காவல்துறை ஈடுபட்டிருப்பதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் தெரிவித்துள்ளார். தற்போது தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளதாகவும் சம்பந்தப்பட் மலேசியர்கள் தங்களின் 20 – ம் வயதில் உள்ளவர்கள் என்றும் அவர் கூறினார்.

இதுவரை நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என்றும், தற்போது தகவல்களை சேகரிக்கும் பணியும் புலனாய்வு பணியும் நடைபெற்று வருவதாகவும் காலிட் அபுபாக்கார் (படம்) கூறியுள்ளார்.

அதேநேரத்தில் சிரியா ஆயுதப் படையில் மலேசியர்கள் என்று சந்தேகிக்கப்படும் 15 இஸ்லாமிய தீவிரவாதிகளை கொண்டுள்ளதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளிலும் மலேசியா இறங்கியுள்ளதாக காலிட் அபுபாக்கர் தெரிவித்தார்.

தற்கொலைத் தாக்குதல்கள் நடவடிக்கைகளிலும் மலேசியர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்,மேல் விவரங்களுக்ககாக மலேசிய காவல்துறை காத்திருக்கிறது என்றும் டான்ஸ்ரீ காலிட் கூறியுள்ளார்.

யுடியூபில் வெளியான அந்த காணொளியை கீழே காணலாம்:-

http://www.youtube.com/watch?v=T-Wz8o_ABro