Home தொழில் நுட்பம் யூ டியூப்-ல் இரு புதிய வசதிகள் அறிமுகம்! 

யூ டியூப்-ல் இரு புதிய வசதிகள் அறிமுகம்! 

754
0
SHARE
Ad

youtube

ஜூன் 30 – யூ டியூப் (You Tube)-ல் இனி காணொளி காட்சிகளைக் நொடிக்கு 60 ஃப்ரேம் என்ற அளவில் காண்பதற்கான வசதியினை, அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

பிரபல காணொளி ஊடகமான யூ டியூப் (You Tube), தனது பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு, பல்வேறு புதிய வசதிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. பயனர்களின் பொழுது போக்கு அம்சங்களில் முக்கிய இடத்தை பிடித்த ‘வீடியோ கேம்கள்’ (Video Game)-, நொடிக்கு 1080 பிக்ஸல் மற்றும் 60 ஃப்ரேம்கள் வரை பார்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது பயனர்களுக்கு புதிவிதமான சிலாகித்துப் போகும் அனுபவத்தை ஏற்படுத்தியது. அதே போன்ற அனுபவத்தை, பயனர்களுக்கு ஏற்படுத்த யூ டியூப் நிறுவனம், இந்த புதிய முயற்சியினை மேற்கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

games

மேலும், யூ டியூப்-ல் ‘கன்டென்ட்’ (Content) உருவாக்குபர்வர்களுடன் பயனர்கள் நேரடியாக பணப் பரிமாற்றம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பற்றிய காணொளிக் காட்சிகளை கீழே காண்க: