ரெசிஃபே (பிரேசில்), ஜூன் 30 – உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்குத் தேர்வு பெற்ற 16 நாடுகளுக்கிடையிலான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில், இன்று மலேசிய நேரப்படி அதிகாலையில் கோஸ்தா ரிக்காவுக்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது.
ஒரு கோலைப் போட்டு, கோஸ்தா ரிக்கா முன்னணியில் இருந்த வேளையில், சளைக்காமல் விளையாடிய கிரீஸ், ஆட்டம் முடிவடைய இருந்த 90வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலையாக்கியதைத் தொடர்ந்து, மேலும் 30 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு ஆட்டம் தொடர்ந்தது.
வழங்கப்பட்ட கூடுதல் அரை மணி நேரத்திலும் இரு தரப்புகளும் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில், பினால்டி வாய்ப்புகள் மூலம் வெற்றியை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டது.
அதன்படி வழங்கப்பட்ட ஐந்து பினால்டி வாய்ப்புகளையும் கோல்களாக மாற்றியதன் மூலம் கோஸ்தா ரிக்கா பினால்டி கோல்கள் 5-3 என்ற நிலையில் வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சில:-
படங்கள்: EPA