Home உலகம் பாகிஸ்தானுக்கு அனைத்துலக செலாவணி நிதியம் நிதி உதவி! 

பாகிஸ்தானுக்கு அனைத்துலக செலாவணி நிதியம் நிதி உதவி! 

647
0
SHARE
Ad

white_houseவாஷிங்டன், ஜூன் 28 – பாகிஸ்தானுக்கு அனைத்துலக செலாவணி நிதியம் (IMF) 555.59 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளிக்க முன்வந்துள்ளது.

தீவிரவாத தாக்குதல், அண்டை நாடுகளுடன் பாதிப்புக்கு உள்ளான வர்த்தக போக்குவரத்து என பல்வேறு பிரச்சனைகளால் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அந்நாட்டை மூன்றாவது முறையாக ஆய்வு செய்த ஐஎம்எஃப் அமைப்பின் நிர்வாகம், அந்நாட்டிற்கு 555.59 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்த அமைப்பின் நிர்வாகக் குழு, பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் அமைப்பால் வரையறை செய்யப்பட்ட தொகையைவிட 4 மடங்குக்கும் அதிகமாக, சுமார் 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியை 36 மாத கால அளவில் நீட்டித்து வழங்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானில் 200-ல் ஒருவர் மட்டுமே வருமான வரியை உண்மையாக செலுத்துவதாகவும், மற்றவர்களின் திரைமறைவான செயல்களினால், இன்று பாகிஸ்தான் கல்வி, மருத்துவம் உட்பட அடிப்படை தேவைகளுக்கு கூட உலக நாடுகளிடம் உதவிகளை எதிர் நோக்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வருமான வரி பிரிவின் உயர் அதிகாரி வருத்தம் தெரிவித்து உள்ளார்.