Home உலகம் ஐ.நா ஆப்கானிஸ்தான் மீதான கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் – இந்தியா 

ஐ.நா ஆப்கானிஸ்தான் மீதான கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் – இந்தியா 

576
0
SHARE
Ad

indiaநியூயார்க், ஜூன் 28 – ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்த போது, ஐ.நா மற்றும் உலக நாடுகள் அந்நாட்டை நடத்திய விதம் போல், தற்போது அந்நாட்டை நடத்தக் கூடாது என இந்தியா வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரத் தூதர் பகவந்த் சிங் பிஷ்ணோய் கூறியதாவது, “முன்பு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்த போது இருந்த நிலைமை தற்போது அங்கு இல்லை.

தற்போதைய அரசு, அங்கு அமைதி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக ஆட்சியை அமைக்க விரும்புகின்றது. எனவே, ஐ.நா மற்றும் உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் மீது கொண்டிருந்த முந்தைய கண்ணோட்டங்களை மாற்ற வேண்டும். அதற்கான எல்லா உதவிகளையும் இந்தியா முன்னெடுத்துச் செல்லும்”

#TamilSchoolmychoice

“மேலும், ஆப்கன் அரசுடனான உறவில் இருந்து இந்தியா எப்போதும் வெளியேற்றிக் கொள்ளாது. இருதரப்பு உறவுகள் மேம்பட அந்நாட்டு அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும்” என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் ஏற்படவிருக்கும் அரசியல் மாற்றம், அந்நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றில் பெரும் மைல் கல்லாக இருக்கும் என இந்தியா தொடர்ந்து பிரகடனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.