‘உங்களுடன் நான்’ என்ற கட்சி நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து, நிர்வாகிகளிடம் விஜயகாந்த் தனித்தனியாக கருத்து கேட்டுள்ளார்.
மேலும், கட்சியை பலப்படுத்துவது குறித்து தன் கருத்துக்களையும் எடுத்துரைத்துள்ளார். பின்னர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து, தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூறுகையில்,
பொதுமக்கள் பிரச்சனைக்காக, மாவட்ட நிர்வாகிகள் அடிக்கடி போராட்டங்களை நடத்த வேண்டும், அது கட்சியை வளர்க்கும். மேலும், தோல்விகளை கண்டு நான் துவண்டுவிட மாட்டேன் என்றும் 2016-இல் நான் தான் முதல்வர் எனவும் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.