Home இந்தியா ரகசிய பயணம் செய்த சோனியா காந்தி: காரணம் என்ன?

ரகசிய பயணம் செய்த சோனியா காந்தி: காரணம் என்ன?

472
0
SHARE
Ad

Sonia Gandhiபுதுடில்லி, ஜூன் 28 – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சோனியா மற்றும் ராகுல் காந்தியை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியசாமி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் அவர் கூறியதாவது, “ஊடக் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது தொடர்பாக சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சோனியா, ராகுல் காந்தி ரகசியமாக வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளதை குறித்து சுப்ரமணியசாமி கூறியதாவது,  “என்னுடைய புகார் தள்ளுபடியாகிவிடும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறியதாக,காங்கிரசைச் சேர்ந்த ராஜீவ் சுக்லா, சோனியாவிடம் கூறினாராம்.

#TamilSchoolmychoice

அதனால் தான் சோனியா வெளிநாடு சென்றுள்ளாராம்” என கூறியுள்ளார்.மேலும் சோனியாவும் ராகுலும் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாளை நாடு திரும்புகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.