Home கலை உலகம் எல்லோரும் பஞ்ச் வசனம் பேசுகிறார்கள்’ நான் எதற்கு பேசணும்? – ரஜினி

எல்லோரும் பஞ்ச் வசனம் பேசுகிறார்கள்’ நான் எதற்கு பேசணும்? – ரஜினி

720
0
SHARE
Ad

linga-rajiniசென்னை, ஜூன் 28 – “பஞ்ச் டயலாக்” எனப்படும் முத்திரை வசனங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தலிருந்தே சினிமாவில் இருந்தாலும், அதற்கொரு ஈர்ப்பும் பிரபலமும் கிடைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச ஆரம்பித்த பிறகுதான்.

ஒருவேளை எம்ஜிஆர் சினிமாவில் கோலோச்சிய காலத்தில் இதே நிலை இருந்திருக்கக் கூடும். கடந்த மூன்று தலைமுறைகளில் பஞ்ச் வசனங்கள் என்றால் ரஜினிதான். மூன்று முடிச்சு, அவர்கள் போன்ற ஆரம்ப காலப் படங்களிலேயே அவரது பஞ்ச்கள் ஆரம்பித்துவிட்டன.

பதினாறு வயதினிலே படத்தில் இதெப்டி இருக்கு என பேசிய இரு வார்த்தைகள் தமிழ் சினிமா வரலாற்றில் நிரந்தர இடம்பிடித்துவிட்டது. ஆனால் ரஜினியின் ரசிகர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த பெரும்பாலான நடிகர்கள் நடை, நடனம், உடல்மொழியில் அவரை அப்படியே நகலெடுக்க முயன்றனர்.

#TamilSchoolmychoice

கூடுதலாக அவரைப் போலவே பஞ்ச் வசனங்களும் பேச ஆரம்பித்தனர். இதை மறைந்த எழுத்தாளர் சுஜாதா, தான் வசனமெழுதிய சிவாஜி படத்தில் விவேக் மூலம் சொல்லியிருப்பார்.

“பஞ்ச் வசனம் பேசப் போறியா சிவாஜி… சின்னப் பசங்க எல்லாம் விரலை மடக்கி பஞ்ச் வசனம் பேசுறாங்க…” இந்தப் படத்துக்குப் பிறகு வந்த தன் படங்களில் அதிகமாக பஞ்ச் வசனங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டார் ரஜினி.

இப்போது லிங்காவிலும் இதே நிலைதான். இந்தப் படத்தில் சில காட்சிகளில் தொடர்ந்து அதிக பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றிருந்தனவாம். இதைப் பார்த்த ரஜினி, “இனி பஞ்ச் வசனங்களை தவிர்த்துவிடலாமே. இப்போது நடிக்கும் எல்லோரும் பஞ்ச் வசனங்கள் பேசுகிறார்கள்.

நாமும் ஏன் அதையே செய்யவேண்டும்” என்று சொல்லி பஞ்ச் வசனங்களை நீக்க சொல்லிவிட்டாராம். ஆனால் இதை ஜீரணிக்க முடியாமல் ரஜினியின் ரசிகரான சந்தானம் உட்பட பலரும் ரஜினியிடம் ‘பஞ்ச் வசனங்கள் பேசுற ட்ரென்ட்டே நீங்க அறிமுகப்படுத்துனதுதான்.

ரசிகர்களாகிய நாங்க உங்ககிட்ட அதிகமா எதிர்பார்ப்பதும் அதைத்தான். மத்தவங்க பேசறது வெறும் டயலாக். நீங்க பேசுனாதான் அது பஞ்ச் டயலாக் தலைவரே,” என்று சொன்னாராம்.

‘வேணாம் சந்தானம்… எல்லாரும் செய்யுறத நாம ஏன் செய்யணும்’ என்று சொல்லிவிட, ஏமாற்றத்துடன் மவுனமாகிவிட்டார்களாம் கேஎஸ் ரவிக்குமார், சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர்.