Home நாடு பிகேஆர் தேர்தல்: கோத்தாராஜாவில் சேவியர் மீண்டும் வெற்றி!

பிகேஆர் தேர்தல்: கோத்தாராஜாவில் சேவியர் மீண்டும் வெற்றி!

595
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderகிள்ளான், ஜூன் 28 – கெஅடிலான் கிள்ளான் கோத்தராஜா நாடாளுமன்ற தொகுதியின் தலைவராக மீண்டும் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த மாதம் பிகேஆர் தேர்தலில் குளறுபடி ஏற்பட்டதால் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு மறு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று பிகேஆர் தலைமையகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பம் முதலே சேவியர் முன்னணி வகித்து வந்தார். இறுதியில் 703 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டாக்சி ஓட்டுநரான மனோகரனுக்கு 273 வாக்குகளும் தில்லைக்கு 168 வாக்குகளும் கிடைத்தன.

துணைத் தலைவருக்கான போட்டியில் ஸ்ரீமூடா சட்டமன்ற உறுப்பினர் சுஹைமி கமாருடின் 708 வாக்குகள் பெற்று தனது பதவியை தற்காத்துக் கொண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விக்னேஸ்வரனுக்கு 169 வாக்குகளே கிடைத்தன. கோத்தாராஜா தொகுதித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அணியே அனைத்து பதவிகளையும் வென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த சில தினங்களுக்கு முன்பு வாக்குச் சாவடியில் அடிதடி ஏற்பட்டு, சேவியரின் ஆதரவாளர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.